Pages

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஜோடி பாடல்கள்

பாடல்: சொர்க்கத்திலே முடிவானது
திரைப்படம்: லலிதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளேல்லாம் வளமாது
இவர் வாழுவுதான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது

தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்
எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
நாயகன் நாயகி பாவம் காண்பது
கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன் வேறெதை சொல்வேன்
தடுக்கின்றதே மன சாட்சி

சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது

வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த ராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது
இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற நன்மையும் தீமையும்
மனிதர்கள் செய்கின்ற வேலை

தேர் கொண்டு வந்தேன் சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
உறவுக்கு என்றும் வயதாவதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான்
இத்தனை காவியம் உண்டு
வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான்
வெள்ளி விழாக்களும் உண்டு

சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளேல்லாம் வளமாது
இவர் வாழுவுதான் வாழ்வென்பது

--------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: நாலு பக்கம் வேடர் உண்டு
திரைப்படம்: அண்ணன் ஒரு கோவில்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா

காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல்...கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா

ஆரண்ய காண்டம் இதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
ஆரண்ய காண்டம் இதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கைவைத்து உறங்கு
தலையடியில் கைவைத்து உறங்கு
அம்மம்மா என்னம்மா

நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா

பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிருதம் கலந்து கொடுத்து
பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிருதம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீருவரை குடித்து
சல்லாப நாடகத்தை நடத்து
சல்லாப நாடகத்தை நடத்து
அம்மம்மா என்னம்மா

நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா

காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல்...கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா

நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
--------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: நீ தாவி ஓடும் மானோ
திரைப்படம்: 18 முத 22 வரை
இசை: ஷங்கர் கணேஷ்


நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
முறைதானோ விடுவேனோ
முறைதானோ விடுவேனோ
அறியாததேனோ அருகினில்
வர உறவுகள் பெற
இந்த நேரம் நல்ல நேரம் சரிதா
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ

பார்வை உந்தன் பார்வை
அது பண்பாடும் பூங்காதல் மேடை
பாடவா அதில் ஆட வா
கதை கோடி பேச வா
ஆடி வரும் வைகை நீந்துகின்ற பொய்கை
தேடி வரும் காளை செய்வதென்ன ஜாடை
குமரிக்கடலில் தினமும் குளிக்க
கொதிக்கின்ற உடலிது குளிருமே சரிதா

நீ காதல் வள்ளல் தானோ
என் மேகம் ஓடும் வானோ
தமிழ் தேனோ தங்கத் தூணோ
யுவ ராஜன் தானோ
அருகினில் வர உறவுகள் தர
இந்த நேரம் நல்ல நேரம் குமரா
நீ காதல் வள்ளல் தானோ
என் மேகம் ஓடும் வானோ

பூவை இதழ் கோவை
சிந்தும் தேன் கொஞ்சம் இப்போது தேவை
மோகமோ ரொம்ப தாகமோ
ஏன் இந்த வேகமோ
வாசம் தரும் பூவே வண்ணத்தமிழ் பாவே
மோகம் வரும் போது வேகம் வரும் கேளு
அமுத நதியில் விழுந்து மிதந்து
சுகம் எனும் கரையினில் உலவுவோம் குமரா

நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ

பாவை இந்த கோதை
உன் பொன் மார்பில் நின்றாடும் தோகை
ஓவியம் அதன் ஆலயம்
உன் வார்த்தை காவியம்
ஓடி வந்த தையல் உன் அழகில் மையல்
கண்ணில் உள்ள ஆசை காதல் மணி ஓசை
இதய சிறகை விரித்து பறந்து
புது யுகம் நவ யுகம் காணுவோம் சரிதா

நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ

--------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: மாமன் வீட்டு மயிலுக்கு
திரைப்படம்: இதயத்தில் ஒரு உதயம்
இசை: ஹம்சலேகா


மாமன் வீட்டு மயிலுக்கு நான் டாட்டா சொல்லிப்புட்டேன்
காமன் வீட்டு கன்னுக்குட்டிய லேசா கிள்ளிப்புட்டேன்
மாலை நேரம் வந்துவிட்டா தேவதாஸ் நான்
காலை நேரம் வந்துவிட்டா காளிதாசன் நான்
பள்ளியறையில் அள்ளி அணைக்க
புள்ளிமயிலே வா யம்மா

மாமன் வந்த நேரத்துல மஞ்சம் துடிக்கிறதே
காமன் வீட்டு கன்னுக்குட்டிக்கு நெஞ்சு துடிக்கிறதே

சுந்தராங்கியே யம்மா யம்மா பந்து ஆட வா
அந்த லீலைகள் தொடங்கட்டும் சிந்து பாட வா
கட்டில் ஆடட்டும் ஒருமுறை கட்டி ஆட வா

மெத்தை யுத்தத்தில் பலமுறை வெற்றி காணவா
வித்தை வேளையில் உன்னுடன் ஒத்து ஊதவா
பத்து மணிகிட்டே பலமுறை முத்தம் வைக்கவா

உன் சரசம் என் சிரசில் ஏறி விட்டதடி
காதல் ரசம் ஏறியதில் காய்ந்ததிந்த கொடி
போதையில் கொஞ்சம் லீலையில் கொஞ்சம்
ஆடட்டும் மஞ்சம் கட்டிப்புடி

மாமன் வந்த நேரத்துல மஞ்சம் துடிக்கிறதே
காமன் வீட்டு கன்னுக்குட்டிக்கு நெஞ்சு துடிக்கிறதே

மோகம் வந்தது சிவசிவ மூச்சு வாங்குது
மாலை நேரத்தில் அடிக்கடி சேலை நழுவுது
முத்த காய்ச்சலில் அடிக்கடி மூச்சு கொதிக்குது

தங்க உடம்புதான் என்னை வந்து தங்க அழைக்குது
மாலை வேளையில் இமை ரெண்டும் தந்தி அடிக்குது
முல்லைப்பூவை கிள்ளவே மனசு தவிக்குது

நீ அணைச்ச இடம் முழுக்க நெருப்பு எரியுது
நீ இழுக்க நான் இழுக்க நெருப்பு எரியுது
காலம் முழுக்க கட்டில் வேணும்
தொட்டில் மட்டும் கூடாது

மாமன் வீட்டு மயிலுக்கு நான் டாட்டா சொல்லிப்புட்டேன்
காமன் வீட்டு கன்னுக்குட்டிய லேசா கிள்ளிப்புட்டேன்
மாலை நேரம் வந்துவிட்டா தேவதாஸ் நீ
காலை நேரம் வந்துவிட்டா காளிதாசன் நீ
பள்ளியறையில் அள்ளி அணைக்க
புள்ளிமயில் நான் வருவேனே

மாமன் வீட்டு மயிலுக்கு நான் டாட்டா சொல்லிப்புட்டேன்
காமன் வீட்டு கன்னுக்குட்டிய லேசா கிள்ளிப்புட்டேன்
--------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: பொன்னோவியம் ஒன்று
திரைப்படம்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
இசை: ஷங்கர் கணேஷ்

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவிய பாவை நீ
கண்ணிலாடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் எழில் கொண்டு

அணைக்கையில் மணக்கின்ற அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
எழுதிட சம்மதம் தருவாயா...தருவாயா

மணவறை மாலைகள் சூடிய பின்னாலே
மலர்மகள் என்னை நீ தொட வரலாம்
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை
பறித்திட வேகமா அவசரமா...அவசரமா

தனிமையில் இருக்கையில் தாமதம் செய்யாதே
என்னிடம் வெட்கம் ஏன் இளங்குயிலே
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சீதனம் வெட்கம்தான் தெரியாதா...தெரியாதா

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவிய பாவை நான்
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு
உன் கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு

--------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
திரைப்படம்: நாடகமே உலகம்
இசை: வி.குமார்


சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ
விழி ஜாலத்தில் உருவானதோ


மேனியில் ஆனந்த லயங்கள்
மோஹன ராகத்தின் நயங்கள்
அங்கங்கள் எங்கெங்கும்
தாளத்தின் கோலங்களே
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ
விழி ஜாலத்தில் உருவானதோ


மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
நால் வகை குணம் கொண்டு ஆடுமோ

நாயகன் தொடும் போது நாணம் விளையும்
நாயகன் தொடும் போது நாணம் விளையும்
நாணலின் இனம் போலே தேகம் வளையும்

நேரம் பொன்னான நேரம்
நெருங்க சொல்கின்றதோ

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

ஆடையைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
ஆடையைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
ஆடவன் துணை கண்டு அஞ்சுமோ

மாதுளம் கனி ஆகும் மாலைப்பொழுது
மாதுளம் கனி ஆகும் மாலைப்பொழுது
மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு

யாவும் கண்ணா உன் சொந்தம்
எடுத்துக் கொண்டாடவா

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ

விழி ஜாலத்தில் உருவானதோ
--------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
திரைப்படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலை இடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலைப்பொழுதில் லீலை புரியும்
ஆசை பிறக்காதோ

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன


மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு
மேனி மீது எழுதும் மணல் தான் உறவு
தலையில் இருந்து பாதம் வரையில்
தழுவிக் கொள்ளலாம்

அதுவரையில் நான்...
அதுவரையில் நான் அனலினில் மெழுகோ
அலைகடலில் தான் அலையும் படகோ


குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலை இடவும் சேலை தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ


காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல
எவரும் இல்லையே

பிறர் அறியாமல்...
பிறர் அறியாமல் பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது


வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயம் ஆகும்

இனிய வீணை நான்
ஸ்ருதி விலகாமல் இணையும் நேரம்
சுவை குறையாமல் இருக்கும் கீதம்


குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலை இடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்

அந்த வேளை வரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ


--------------------------------------------------------------------------------------------------------------------
 
பாடல்: ரொம்ப நாளாக எனக்கொரு
திரைப்படம்: என்னடி மீனாட்சி
இசை: ஷங்கர் கணேஷ்

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல


ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ


சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ...நீயும் கண்ணனோ


ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ


ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது

அன்றில் பறவை கண்ட உறவை
அன்றில் பறவை கண்ட உறவை
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ


ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

--------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: நள்ளிரவில் பள்ளியறை நாடகம்
திரைப்படம்: ஒரு கை பார்ப்போம்
இசை: விஜயபாஸ்கர்


நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா

நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா

அங்கங்கே நான் தொடத்தொட
அங்கங்கள் தான் சுடச்சுட
அணைக்கையில் பூமேனி வாட

அம்மம்மா ஓ சிலிர்க்குது
எங்கெங்கேயோ இனிக்குது
ஆசை தேனாறு ஊறுமோ

அன்னம் கொஞ்சம் பக்கம் வந்தால்
இன்னும் இன்னும் தித்திக்கும்

மன்னன் இன்னும் சொல்லித் தந்தால்
இன்பம் எல்லாம் சந்திக்கும்


நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா

அன்புச் சின்னம் பதிக்கவோ
இன்பத் தேனில் குளிக்கவோ
இதைவிட ஏகாந்தம் ஏது

எல்லாம் இன்று புரிந்தது
சொர்க்கம் ஒன்று தெரிந்தது
மேலும் நான் கூற வேண்டுமா

கட்டிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும்
கற்றுக் கொண்ட பாடங்கள்

கன்னிப்பெண்ணின் நெஞ்சில் நிற்கும்
காதல் தேவன் வேதங்கள்


நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா
சொல்லாததை நான்...அம்மாடியோ நான்

--------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: மோகம் வந்து நெஞ்சில் மோதும்
திரைப்படம்: நினைவுகள் மறைவதில்லை
இசை:

மோகம் வந்து நெஞ்சில் மோதும் காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்

உள்ளம் துடிக்குது மின்னல் அடிக்குது
கைகள் அணைக்குது நெஞ்சம் இனிக்குது

சுகம்...ம்ம்...சுகம்...ம்ம்...சுகம்...ம்ம்
மோகம் வந்து நெஞ்சில் மோதும் காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்


பூவே வா வா காதல் நீராடு
வாழ்வே நீதான் எங்கும் தேனாறு
பசி தீர்க்கும் பழமாக நீ மாறவேண்டும்
பனியோடு மலர்போல உறவாடவேண்டும்
அருகிலே நெருங்கி வா கதைகளை சொல்ல வா

மோகம் வந்து நெஞ்சில் மோதும் காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்


நாணம் நீங்கும் நாளும் உன்னாலே
காமன் பானம் பாயும் உன்னாலே
மடிமீது கொடிபோல விளையாடும் வேளை
இளந்தென்றல் தாலாட்ட இளைப்பாறும் சோலை

இதழ்களில் இதழ்களால் கவிதைகள் சிந்த வா

மோகம் வந்து நெஞ்சில் மோதும் காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்

உள்ளம் துடிக்குது மின்னல் அடிக்குது
கைகள் அணைக்குது நெஞ்சம் இனிக்குது

சுகம்...ம்ம்...சுகம்...ம்ம்...சுகம்...ம்ம்

--------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: ஸ்ரீராமன் வருகின்ற பாதை
திரைப்படம்: மூக்கணாங்கயிறு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ஸ்ரீராமன் வருகின்ற பாதை
நின்று சிருங்காரம் பாடுகிறாள் சீதை
ஸ்ரீராமன் வருகின்ற பாதை
நின்று சிருங்காரம் பாடுகிறாள் சீதை

ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை
இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை
இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை


என் உரையை இதழாலே எழுதுவேன் வா
உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா
என் உரையை இதழாலே எழுதுவேன் வா
உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா
உன் உரையை எழுதுவோம் முத்தமாக
முடிவுரையில் மயங்குவோம் மொத்தமாக


மயங்காத பெண்மையே மதிப்புரை
அதன் மறுபக்கம் ஆண்மையின் பதிப்புரை
மயங்காத பெண்மையே மதிப்புரை
அதன் மறுபக்கம் ஆண்மையின் பதிப்புரை
பூப்போல உன் மேனி புகழுரை
நான் பொன்போல காப்பதே சிறப்புரை
நான் பொன்போல காப்பதே சிறப்புரை


ஸ்ரீராமன் வருகின்ற பாதை
நின்று சிருங்காரம் பாடுகிறாள் சீதை


விடிகின்ற வரையிலும் ஆய்வுரை
அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை
விடிகின்ற வரையிலும் ஆய்வுரை
அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை
அப்போது எழுதுவோம் விரிவுரை
நாம் இப்போது தொடங்குவோம் அணிந்துரை


அச்சமும் நாணமும் அறிவுரை
அவை கனிந்து சுவைதேடினால் கருத்துரை
அச்சமும் நாணமும் அறிவுரை
அவை கனிந்து சுவைதேடினால் கருத்துரை
ஆசைக்கு அணை போடும் நிறைவுரை
அது அள்ளினால் குறையாத பொருளுரை
அது அள்ளினால் குறையாத பொருளுரை


ஸ்ரீராமன் வருகின்ற பாதை
நின்று சிருங்காரம் பாடுகிறாள் சீதை

ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை
இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை
இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
 
--------------------------------------------------------------------------------------------------------------------
  
பாடல்: தேவன் கோயில் மணி
திரைப்படம்: குழந்தை இயேசு
இசை: ஷ்யாம்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
குழந்தை இயேசுவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி

இதழில் இருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ இளமை தாங்குமோ

இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது

இவள் கண்ணில் இன்று இரு சந்திரோதயம்
இந்த தேவன் மகள் ஒரு தேவாலயம்

அரும்புகள் விரிகின்ற ஆசை நேரம்
தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி

திரிகள் இருந்தும் இருளில் அணைந்து
தனிமையில் கிடந்தேனே குழந்தை இயேசுவே

திரிகள் இருந்தும் இருளில் அணைந்து
தனிமையில் கிடந்தேனே குழந்தை இயேசுவே

அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற

எந்தன் மார்பில் விழும் ஒரு ரோஜா மலை
இது கண்ணீர் இல்லை ஒரு காதல் மழை

இரு நதி ஒரு நதி ஆகும் வேளை

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
குழந்தை இயேசுவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்

ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
 
--------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: நான் சொல்ல வந்தேன்
திரைப்படம்: புதிய மனிதன்
இசை: ஷங்கர் கணேஷ்
 
நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாணத் தேதி
ஜானகி ஶ்ரீராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான சேதி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன் பாதி

மரகத பைங்கிளி அருகினிலே
வருகையிலே தருகையிலே
மன்னன் தேவை இன்னும் என்னென்ன

மதுரச இதழ்களை திறந்து விடு
தேனை எடு விருந்து கொடு
ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன

காலங்கள் கூடட்டும் கல்யாணம் ஆகட்டும்
கண்ணா உன் ஏக்கங்கள் அந்நாளில் தீரட்டும்

ஜானகி ஶ்ரீராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான சேதி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன் பாதி

திருமகள் பழகிடும் நடையழகும்
இடையழகும் சடையழகும்
தேவன் கோவில் தேரைப்போல் ஆட

பருவத்து கனியென பறிப்பதென்ன
ரசிப்பதென்ன ருசிப்பதென்ன
போதும் போதும் என்றே போராட

தேன் கொண்ட கிண்ணங்கள் நீ கொண்ட கன்னங்கள்
நேர் வந்து நின்றாலே வேறென்ன எண்ணங்கள்

ஜானகி ஶ்ரீராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான சேதி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன் பாதி

நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாணத் தேதி

-------------------------------------------------------------------------------------------------------------------






No comments:

Post a Comment